துட்டகைமுனு
அனுராதபுரத்தை தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்த மன்னர்களில் துட்டகாமினியும் ஒருவராவார் காவன்தீசனுக்கும் விகாரமாதேவிக்கும் மகனாக பிறந்த இவரது ஆட்சிக்காலம் கி.மு 161- கி.மு 137 வரையிலான காலப்பகுதி ஆகும். இவன் வரலாற்றை அறிய உதவுகின்ற பிரதானமான நுல் மகாவம்சம் ஆகும்;. 37 அத்தியாயங்களை கொண்ட மகாவம்சத்தில் 11 அத்தியாயங்கள் துட்டகாமினியின் வரலாற்றை குறிப்பிடுவதோடு அதில் நான்கு அத்தியாயங்களில் அரசியல் பணிகள் பற்றியும் ஏழு அத்தியாயங்கள் சமயப்பணிகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இம்மன்னனின் ஆட்சி சிறப்பு பற்றி நோக்குவோம்.
இளமைக்காலத்தை அடைந்த துட்டகைமுனுவிடம் காவன்தீசன் மூன்று உறுதிமொழி கேட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
• தேரவாத பௌத்த சமயப்பணிகள் ஆற்றுதல் வேண்டும்
• தம்பியாகிய சத்தாதீசனுடன் சண்டையிடக்கூடாது.
• அநுராதபுரத்தில் உள்ள எல்லாளன் மீது போர் செய்யக்கூடாது.
முதல் இரண்டு வரங்களையும் ஏற்றுக்கொண்ட துட்டகைமுனு மூன்றாவது வரத்தை மறுத்ததோடு தந்தையோடு முரண்பட்டுக்கொண்டு மலையகத்தில் உள்ள கொத்மலைக்கு சென்றான். சில காலங்களின் பின்னர் மகாகமையை தலைநகராகக்கொண்ட உருகுணையைக் கைப்பற்றி பின்னர் அநுராதபுரம் மீது படையெடுத்து எல்லாளனையும் தோற்கடித்து அநுராதபுரத்தை தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்துள்ளான்.
மேலும் துட்டகைமுனு மன்னனின் சமயப்பணி பற்றி நோக்கின் 89 விகாரைகளை அமைத்ததாகவும் அதில் ரூவன்வெலிசாய பிரபல்யமான விகாரையாக கருதப்படுகின்றது.மிருசவெட்டிய விகாரை மற்றும் லோகமகாபாய எனும் கட்டடமும் இவரால் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு துட்டகைமுனு அநுராதபுரத்தில் அரசியல் மற்றும் சமய பணிகளை மேற்கொண்டுள்ளான்.
https://youtu.be/u72tAhiDQoc
உசாத்துணை நுல்கள்
1. கிருஸ்ணராஜா.செ (1999)'இலங்கை வரலாறு 'பாகம்-1,பிறைநிலா வெளியீடு
2. பத்மநாதன்.சி(2013)'இலங்கைத் தமிழ்சாசனங்கள்'இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம
இது பாடசாலை மாணவர்களுக்கு பயன்படும்
ReplyDelete