திருக்கேதீஸ்வரம்


புராதன இலங்கையின் சிறப்பு வாய்ந்த ஐந்து ஈஸ்வரங்களுள்  ஒன்றாகும். இக்கோயில் இலங்கையின் மேற்குக் கடற்கரைப்பகுதியிதிருக்கே ஒரு சிவன் கோயிலாகும். இது மன்னார் மாவட்டத்திலுள்ள மாதோட்டத்தில் அமைந்துள்ளது.இக்கோயில் வட இலங்கையில் பிரசித்தி பெற்றுள்ள ஆலயமாகும். கேது வழிபாட்டதலமாதலால் இக்கோயில் திருக்கேதீஸ்வரம் என அழைக்கப்பட்டது.என்று ஆய்வாளர்;கள் கூறுகின்றனர். எனவே இவ் ஆலயத்தின் வரலாற்று தொன்மையை நோக்குவோம்.

சூரபதுமனின் மனையாளனின் பேரனான துவட்டா பிள்ளைப்பேறின்றி திருக்கேதீஸ்வரத்திலுள்ள பாலாவி தீர்த்தத்தில் நீராடி கேதீச்சரத்தானை வழிபட்டமையால் திருவருள் கைகூடி பிள்ளைப்பேறு பெற்றார்.பின் இத்தலத்தில் வாழத்தலைப்பட்டு அவ்விடத்தைப் பெருநகராக்கினார். துவட்டாவில் உருவாகியமையால் துவட்டா எனவும் காலப்போக்கில் பெருநகரமாய் திகழ்ந்தமையால் மாதுவட்டா எனவும் அழைக்கப்பட்டது.இத்தலத்தில் அமைந்துள்ள பாலாவித் தீர்த்தத்தில் நீராடி இறுதிக்கடன் புரிவோரக்கு புண்ணியம் கிடைக்குமெனவும் இத்தீரத்தத்தில் நீராடுவோர்க்குப் பிரமகத்தி எனும் பாவங்கள் தீருமென்பது ஐதீகம் ஆகும்.

மேலும் கி.பி ஏழாம் எட்டாம் ற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்மந்தமூர்த்தி நாயனராலும் சுந்தரமூர்த்தி நாயனராலும் போற்றிப் புகழ்ந்து திருப்பதிகம் பாடப்பெற்ற சிறப்புடைய தலம் இதுவாகும். இத்திருக்கோயில் புராணம் மற்றும் இதிகாசகாலத்து வரலாற்று கொண்டுள்ளது.

அந்தவகையில் இதிகாசங்களுள் ஒன்றான இராமயணக்கதையில் திருக்கேதீஸ்வரம் பற்றி சிறந்த முறையில் குறிப்பிடப்படுகின்றது.அதாவது இராவணனின் மனைவியான மண்டேதரி சிறந்த சிவபக்தை ஆவார். அவள் மாதோட்டத்தில் இருந்த திருக்கேதீஸ்வரத் திருக்கோயிலுள்ள சிவபெருமானை வழிபாடு செய்தமை பற்றியும் எடுத்துரைக்கின்றது.
நவக்கிரகங்களில் ஒருவரான கேது பகவான் இத்திருக்கோயிலில் சிவபெருமானை வழிபடப்பட்டு தமது சாபம் நீங்கப் பெற்றார். என்று தட்சணகைலாய மாண்மியம் என்ற பண்டைய வரலாற்றுல் கூறுகின்றது. கேது பகவான் பத்தியுடன் வணங்கியதால் இத்திருக்கோயிலுக்கு திருக்கேதீஸ்வரம் என்னும் பெயர் உண்டாயிற்று.

இந்நாட்டு பழங்குடியினரான நாகரது முக்கிய வழிபாட்டு தலமாதலால் இத்திருக்கோயில் நாகநாதர் எனவும் வழங்கி வந்துள்ளது. மற்றும் சோழ பாண்டிய மன்னர்கள் பல திருப்பணிகளை ஆற்றியுள்ளனர். வன்னி யாழ்ப்பாண அரசர்கள் நித்திய நைமித்தியங்களை இடையறாது செய்த பெருமையுங் கொண்ட திருத்தலமாகும். இத்திருத்தலத்தை பத்தாம் ற்றாண்டில் சோழமன்னர்களால் இராஜராஜேஸ்வரம் என அழைக்கப்பட்டது.இத்திருத்தலம் உலகப் புகழ் பெற்ற திருத்தலமாக விளங்கியுள்ளது. இவ்வாறு மாதோட்டத்தில் அமைந்துள்ள திருக்கேதீஸ்வரம் வரலாற்று சிறப்புமிக்க ஆலயமாக விளங்கியுள்ளது.





உசாத்துணை நுல்கள்

1.சிற்றம்பலம்.சி(1984)'சிந்தனை' ஈழமும் இந்துமதமும்.
2.சுபாஷினி.ப(2011)'கலைக்கேசரி' பொலநறுவைக்கால இந்துப்பண்பாடு.
3.இந்திரபாலா.கா 2009'திராவிட கட்டடக்கலைக்மரபின் சிறப்பியல்பு'


Comments

  1. அன்பே சிவம் திருச்சிற்றம்பலம். சிவபூமி ஈழம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

துட்டகைமுனு

கோவலன் கூத்து