கோவலன் கூத்து


கிராமிய கூத்துக்களில் கோவலன்கூத்தும் ஒன்றாகும். காவிரிப்பூ¬ம்பட்டினத்து பெருவணிகன் மாசாத்துவானின் மகன்  கோவலன் இவன் கலையுணர்வு வறியோர்க்கு உதவும் நற்பண்பும் மிக்கவன் காவிரிபூம்பட்டினத்தும் பெருவணிகன் மாநாய்களின் மகள் கண்ணகி இவள் திருமகள் போன்ற அழகும் அழகிய பெண்கள் போற்றும் பெருங்குணச்சிறப்பும் கற்புத்திறமும் கொண்டவன் இவ்விருவரும் மனையாளம் புண்டு இன்புற்று வாழ்ந்தனர்.



கோவலன் ஆடலரசி மாதவியை விரும்பிக் கண்ணகியை விட்டுப்பிரிந்தான் அவள் மாதவி தங்கித்தன் செல்வத்தையெல்லாம் இழந்தான. மாதவி இந்திரவிழாவில் கானல்வரிப் பாடலை பாடினாள் பாடலின் பொருள் தவறாய் புரிந்து கொண்ட கோவலன் மாதவியை விட்டு பிரிந்தவன் தன் மனைவி கண்ணகியிடம் சென்றான் தான் இழந்த செல்வத்தை ஈட்ட எண்ணினான் வணிகம் செய்தற்பொருட்டு கண்ணகியிடம் மதுரைக்குச் சென்றான் அவர்களுக்கு வழித்துணையாகக் கவுந்தியடிகள் என்னும் சமணத்துறவி சென்றார். அவர் மதுரை நகர்ப்புறத்தில் அவர் மாதரி என்னும் இடைக்குல மூதாட்டியிடம் அவ்விருவரையும் அடைக்கலப்படுத்தினர் கோவலன் சிலம்பு விற்றுவர மதுரை நகரக்கடை வீதிக்ச் சென்றான். விலைமதிப்பற்ற காற்சிலம்பு ஒன்றை விற்பதை பாண்டிய மன்னனால்; பொற்கொல்லன் அறிந்தான்.

பாண்டிமாதேவியின் காற்சிலம்பைக் களவாடிய பொற்கொல்லன் பொய்யான பழியைக் கோவலன் மேல் சுமத்தினான்  அதனால் சிலம்பைக்கொணர்க என்று ஆணையிட்டான். கோவலன் கொலை செய்யப்பட்ட மாதரி மூலம் அறிந்த கண்ணகி பெருந்துயருற்றாள். அவள் தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை மன்னனுக்கும் உலகோருக்கும் உணர்த்த எண்ணினான் மன்னனின் அனுமதியோடு வாயிற்காவலன் கண்ணகியை பாண்டிய மன்னிடம் அழைத்துச ;சென்றான் மன்னன் கண்ணகியை நோக்கி நீரொழுகும் கண்களுடன் எம்முன் வந்து நிற்கும் நீ யார் என வினவினான். கண்ணகி மன்னனை நோக்கி ஆராய்ந்து  நீதி வழங்காத மன்னனே உன்னிடம் கூறுவது ஒன்றே ஒன்றுதான் என உரைக்கத் தொடங்கினாள் ;. மதுரை நகரத்திற்கு வந்து என் காற்சிலம்பினை விற்க முயன்று உன்னால் கொலைசெய்யப்பட்ட மனைவி நான் கண்ணகி என்பது என் பெயர் என்று கூறினாள்.

 பொற்கொல்லனின் பொய்யுரை கேட்டு அறநெறி தவறிய அரசனே நானே கள்வன் அறந்தவறாது குடிமக்களை காக்கும் தொன்மை ஆட்சிகள் முதல் தவறியது என் வாழ் நாள் அழியட்டும் என்றவாறு மயங்கி வீழ்ந்தாள். மன்னனின் மனைவி உள்ளங்கலங்கி உடல் நடுங்கி கணவனை இழந்த மகளிற்கு எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது என்று கூறித் தன் கணவனின் திருவடிகளை வணங்கி நிலத்தில் வீழ்ந்து இறந்தாள். எனவே கிராமிய கூத்துக்களில் கோவலன் கூத்து இன்றுவரை மக்கள் மத்தியில் இடம்பெற்று வருகின்றமை அதன் சிறப்பம்சத்தை வெளிப்படுத்துகின்றது.





உசாத்துணை நுல்கள்

Comments

Popular posts from this blog

துட்டகைமுனு

திருக்கேதீஸ்வரம்