பொலநறுவைக்கால இந்துக்கோயில்கள்


இலங்கையில் பண்டைய தலைநகரங்களில் ஒன்று பொலநறுவை ஆகும் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகராக்கப்பட்டு ஜனநாத்ங்கலம் என அழைக்கப்பட்டது. இந்த நகரத்தில் அக்காலத்தில் சோழர்களின் படைவீரர்கள் அலுவலர்கள் எனப்பல தென்னிந்தியர்கள் வாழ்ந்து வந்தார்கள். இந்துக்களான இவர்களது தேவைக்காக கட்டப்பட்டனவே பொலநறுவை இந்துக்கோயில்களாகும். ஏனவெ இவை பற்றி விரிவாக நோக்குவோம்


இங்கு பத்துச் சிவன் கோயில்களும் ஐந்து விஷ்னு கோயில்களும் மற்றும் காளி கோயில்களுமாகப் பதினாறு இந்துக்கோயில்கள் அகழ்வாராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டுள்ளது. இவை அனைத்துமே சோழர் காலத்தில் கட்டப்பட்டவை என்பதற்கில்லை ஒன்றிரண்டு கோயில்கள் மட்டுமே அவ்வாறு கூறத்தக்கவை பாண்டியர் காலத்திலும் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. கலிங்கமகானின் காலத்திலும் சில கட்டப்பட்டிருக்க கூடுமென கருதப்படுகின்றது.


இலங்கை தொல்பொருள் துறையினர் சிவதேவாலயங்களுக்கு முதலாம் சிவதேவாலயம் இரண்டாம் சிவதேவலாயம் என்றவாறு பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுட் சோழர்காலத்தில் வானவன் மாதேவி ஈஸ்வரம் என அழைக்கப்பட்ட இரண்டாம் சிவதேவாலயமும் ஓரளவுக்கு முழுமையாக பேணப்பட்ட நிலையில் உள்ளது. இது தவிர ஐந்தாம் சிவதேவாலயமும் ஓரளவுக்கு நல்ல நிலையில் உள்ளது. ஏனையவற்றுள் பெரும்பாலானவை அடித்தளம் முதலான குறைந்தளவு தடையங்களையே கொண்டுள்ளன.

இக்கோயில்களின் கட்டிடக்கலை அம்சம் பற்றி நோக்கும் போது முழுமையாக பேணப்பட்டுள்ள வானவன் மாதேவி ஈஸ்வரமும் மற்றும் எஞ்சியுள்ள வேறு சில கோயில்களும் அவற்றின் கட்டிடக்கலைப்பாணியை ஆதாரமாக வைத்துச் சோழர்காலக்கோயில்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் வானவன் மாதேவி ஈஸ்வரத்தில் காணப்பட்ட கல்வெட்டினைக்கொண்டு இது முதலாம் இராஜேந்திரசோழனின் ஆரம்பகாலத்தை சேர்ந்தது எனக் கணிக்கப்பட்டுள்ளது. மற்றும் முதலாம் சிவதேவலாயம் பாண்டியர் கட்டிடகலைப்பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.


இங்கே கட்டப்பட்ட பெரும்பாலான இந்துக்கோயில்கள் அளவிற்சிறியன வானவன் மாதேவி ஈஸ்வரத்தின் அமைப்பு சோழர்காலத்திராவிடக் கட்டிடப்பாணியில் அமைந்துள்ளது. இக்காலத்தில் அமைக்கப்பட்ட ஏனைய கோயில்களும் இப்பாணியில் அமைந்துள்ளன. மற்றும் இக்கோயில்கள் கற்றளி அமைப்பு முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் சிவாலயம் சுந்தரச்சோழனினுடைய பட்டத்தரசியின் நினைவாக அதாவது இராஜராஜசோழனின் தாயின் நினைவாக இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.மற்றும் இக்கோயிலுள்ள அதிராஜேந்திரசோழனுடைய கல்வெட்டு சோழர்களின் கோயில் நிர்வாக முறையினை சிறப்பாக கூறுகின்றது.

அந்தவகையில் பொலநறுவையில் சோழர்களால் அமைக்கப்பட்ட இந்துக்கோயில் கட்டிடக்கலை மரபை பின்பற்றி பிற்பட்ட காலத்தில் ஆட்சி செய்த சிங்கள மன்னர்களான விஜபாகு மற்றும் பராக்கிரமபாகு மன்னர்களால் விகாரைகள் அமைந்தமை சிறப்பம்சமாகும்.



உசாத்துணை நுல்கள்


1.சிற்றம்பலம்.சி(1984)'சிந்தனை' ஈழமும் இந்துமதமும்.
2.சுபாஷினி.ப(2011)'கலைக்கேசரி' பொலநறுவைக்கால இந்துப்பண்பாடு.
3.இந்திரபாலா.கா2009'திராவிட கட்டடக்கலைக்மரபின் சிறப்பியல்பு'

Comments

Popular posts from this blog

துட்டகைமுனு

திருக்கேதீஸ்வரம்

கோவலன் கூத்து