பொலநறுவைக்கால இந்துக்கோயில்சிற்பம்
பொலநறுவையிலுள்ள கோயில்கள் பெரும்பாலும் இடிந்து அழிந்துவிட்டதால் அவற்றுள் அமைக்கப்பட்டிருந்த சிற்பங்களிற் பெரும்பாலனவை கிடைக்கவில்லை கிடைத்தனவற்றை பாதுகாக்கப்படமையால் அகழ்வாய்வுகளிலே முற்காலங்களிற் கிடைத்த உருவங்கள் பல இப்போது இல்லாமல் போயுள்ளது. அங்குகிடைத்த வெண்கலச்சிற்பம் கவர்ச்சிமிக்கவை என்பதால் ஆராய்ச்சியாளரும் தொல்பொருள் திணைக்களத்தாரும் அவற்றிலே கவனம் செலுத்தினார்கள் ஆயினும் பொலநறுவைக் கோயில்களின் அழிபாடுகளில் காணப்பெற்ற சிற்பங்கள்ஒரு உன்னதமான கலைப்பாணியின் குணாம்சங்களை பிரதிபலிக்கும் சின்னங்கள் ஆகும்.
ஐந்தாம் சிவாலயத்தின் இடிபாடுகளிடையே கிடைத்த படிமங்களான ஆசனக்கோலத்து விநாயகர் நான்கு கரங்கள் பொருந்திய ஸ்தானக விஷ்னு மற்றும் அம்மனின் படிமம் நந்தி தோளிலே தண்டத்தை தாங்கிய ஆசன நிலையிலுள்ள தெய்வ படிமம் சப்தமாதர் சரஸ்வதி கௌமாரி விநாயகரின் படிமம் செதுக்கப்பட்ட படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஆறாவது சிவாலயத்தின் வளாகத்தினுள் விநாயகர் விஷ்னு ஆகியோரின் படிமங்களும் நந்தியின் உருவமும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விஷ்னுவின் வடிவ ஆசனக்கோலமானது அதில் இரண்டு கரங்கள் உள்ளன. கால் ஒன்றினை மடித்து ஆசனத்தில் வைத்த நிலையில் காணப்படுகின்றது. திருமாலின் இருபக்கங்களிலும் சக்திகளின் உருவங்கள் அமைந்துள்ளன. இரண்டாம் விஷ்னு கோயிலின் மூலஸ்தானத்தில் ஸ்தானக நிலையிலுள்ளதும் நான்கு கரங்கள் உடையதுமான விஷ்னுவின் வனப்பு மிக்க படிமம் உள்ளது.
பொலநறுவையிலிருந்து அம்மன் கோயிலின் மூலஸ்தானத்திலே மகிஷாமர்த்தியின் விக்கிரகம் ஸ்தாபனமாயிருந்தது. அகழ்வுகள் நடந்தபோது அது ஆலயத்தின் வெளிப்புறத்திலே உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. எனவே பொலநறுவைக்கால கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பமானது சிறந்த கலைநுட்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.
.
உசாத்துணை நுல்கள்
1.சிற்றம்பலம்.சி(1984)'சிந்தனை' ஈழமும் இந்துமதமும்.
2.சுபாஷினி.ப(2011)'கலைக்கேசரி' பொலநறுவைக்கால இந்துப்பண்பாடு.
3.இந்திரபாலா.கா2009'திராவிட கட்டடக்கலைக்மரபின் சிறப்பியல்பு'
Comments
Post a Comment